மேலும் செய்திகள்
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கங்கள் தர்ணா
23-Sep-2026
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் முகமது அலிபாத் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் கிழக்கு மாவட்ட தலைவர் புவனேசன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுக பெருமாள், வைரவன், கிளை தலைவர் முருகன், மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
23-Sep-2026