மாணவருக்கு உதவி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த மாணவர், தான் இளைஞர் நீதிக் குழுமத்தைச் சார்ந்த இளஞ்சிறார் பிரிவில் உள்ளதாகவும், தற்போது பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தனது குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதால், மேல்படிப்பைத் தொடர கல்வி உதவித்தொகை வழங்குமாறு கலெக்டரிடம் மனு அளித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று 2026-27ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையாக ரூ. 24 ஆயிரம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை கலெக்டர், பெற்றோரிடம் நேரில் வழங்கினார். இளைஞர் நீதிக் குழும உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.