உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி மைதானத்தில் புற்கள் மாணவர்கள் தவிப்பு

பள்ளி மைதானத்தில் புற்கள் மாணவர்கள் தவிப்பு

விருதுநகர்: காரியாபட்டி அருகே மாந்தோப்பில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் மைதானம் முறையாக பராமரிக்கப்படாமல் புற்கள் அடர்ந்து வளர்ந்து இருந்த இடம் தெரியாமல் உள்ளது. இதனால் விளையாட்டில் மாணவர்களின் திறன்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காரியாபட்டி அருகே மாந்தோப்பில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் பலர் வந்து படித்து விட்டு செல்கின்றனர். இங்குள்ள மாணவர்கள் விளையாட்டில் திறமைகளை வளர்த்து, அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக மைதானம் அமைக்கப்பட்டது.ஆனால் மைதானத்தை முறையாக பராமரிக்காமல் புற்கள் அடர்ந்து நிறைந்திருக்கும் அளவிற்கு பள்ளி நிர்வாகத்தினர் அப்படியே விட்டு விட்டனர். இதனால் மாணவர்களுக்கு விளையாட்டின் மீதான ஆர்வம் குறைந்து, திறன்கள் பாதிக்கப்படும் நிலை உண்டாகியுள்ளது. இப்படி பயன்படுத்த முடியாத நிலையில் மைதானம் இருக்கும் போது எப்படி விளையாட்டு வகுப்பு மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மாந்தோப்பு அரசு உயர் நிலைப்பள்ளி மைதானத்தை புனரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை