உள்ளூர் செய்திகள்

 ஆய்வுக்கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் அருண் தம்புராஜ் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலையில் நடந்தது. அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பதிவுகளில் மாற்றங்கள் கோரியும் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக ஆய்வு செய்தார். மேலும் விண்ணப்பங்கள் மீது உரிய விசாரணை செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் டி.ஆர்.ஓ., ஆனந்தி உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி