உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பணிகள் செய்து பணம் பெற முடியாமல் தவிப்பு; நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில்

பணிகள் செய்து பணம் பெற முடியாமல் தவிப்பு; நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 450 ஊராட்சிகள் உள்ளன. இவற்றிற்கான வளர்ச்சி பணிகளுக்கு மத்திய மாநில அரசுகள் நிதிகளை ஒதுக்குகின்றன. மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், வாறுகால், ரோடு, பேவர் பிளாக் கற்கள் பதித்தல், குடிநீர் பணிகள் உள்ளிட்டவை செய்யப்படுகின்றன. அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் பதிவு செய்த ஒப்பந்தகாரர்களிடம் மூலம் வேலைகள் நடக்கிறது. 2023--24 ம் ஆண்டு மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பல கோடி ரூபாய் நிதியில் வளர்ச்சி பணிகள் செய்து உள்ளனர். அத்தியாவசிய பணி என்பதால் பணிகளை தாமதம் இன்றி முடித்துள்ளனர். ஆனால், பணிகள் முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப் படவில்லை. ஒப்பந்ததாரர்கள் கூறுகையில்,'' வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்ற பதிலை தான் கூறுகின்றனர். வட்டிக்கு பணம் வாங்கி பணியை செய்கின்றோம். உரிய நேரத்தில் பணம் எங்களுக்கு கிடைக்காததால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி, போனஸ் மற்றும் பிற செலவுகளுக்காக கடைக்காரர்கள் வாங்கிய பொருட்களுக்கான பணத்தை கட்ட சொல்லி கறார் காட்டுவதால், நாங்கள் ஓடி ஒளிய வேண்டிய நிலையில் உள்ளோம். மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததாரர்களுக்கு வேலை செய்த பணிகளுக்கு பணத்தை உடனடியாக வழங்க கோரி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என ஒப்பந்ததாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை