உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அர்ப்பணிப்பு உணர்வால் முன்னணியில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

அர்ப்பணிப்பு உணர்வால் முன்னணியில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

விருதுநகர்:இந்தியாவில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் பணியாளர்களை பெற்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் முன்னணியில் உள்ளது', என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.விருதுநகரில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வு பெற்ற ஊழியர் முன்னேற்ற நல சங்கத்தின் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:தமிழக அரசு போக்குவரத்து கழகம் இந்தியாவில் உள்ள மற்ற அரசு போக்குவரத்து கழகங்களை ஒப்பிடுகையில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் பணியாளர்களை பெற்ற முன்னணியில் உள்ளது. மேலும் பல ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்கள் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து செல்வதை போல பஸ்சை பிரிந்து செல்ல முடியாமல் கட்டியணைத்து பிரியாவிடை கொடுக்கின்றனர், என்றார்.முன்னதாக ஓய்வு பெற்ற தொழிற்சங்க ஆதரவற்ற பெண் உறுப்பினர்கள், மூத்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். இதில் அகில இந்திய தொ.மு.ச., பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தலைவர் நடராஜன், பொருளாளர் வள்ளுவன், மண்டல தலைவர் ராஜா செல்வம், எம்.எல்.ஏ., சீனிவாசன், நகராட்சி தலைவர் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை