உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஸ்ரீவில்லிபுத்துாரில் ஜவுளி மூடைகள் பறிமுதல்

 ஸ்ரீவில்லிபுத்துாரில் ஜவுளி மூடைகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்த 3 ஜவுளி மூடைகளை விருதுநகர் துணை மாநில வரி ஆய்வாளர் ரவிச்சந்திரன் கைப்பற்றி தேர்தல் பிரிவில் ஒப்படைத்தார். ஏப்.12 ல் விருதுநகர் துணை மாநில வரி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதியில் ஆய்வு செய்த போது ஸ்ரீவில்லிபுத்துாரில் ஒருடிராவல்ஸ் நிறுவனத்தில் 3 ஜவுளி மூடைகள் இருந்துள்ளது. அதுகுறித்து விசாரித்த போது ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த சிதம்பர மாணிக்கம் என்பவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு அந்த மூடைகளை அனுப்ப கொண்டு வந்துள்ளார். அதற்குரிய ஜி.எஸ்.டி. பில்லை வாங்கி பார்க்கும்போது ஒரு சில தவறுகள் இருந்ததால் அபராதம் விதித்துள்ளார். இந்நிலையில் மூடைகளை திறந்து பார்த்தபோது, தி.மு.க. ஆதரவு நாளிதழ் வைத்து கட்டப்பட்ட 240 சேலைகளும், 575 துண்டுகளும் இருப்பது தெரிய வந்தது. அதனை ஸ்ரீவில்லிபுத்துார் தாசில்தார் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர். அவரது விசாரணைக்கு பின்னர் பார்சல்கள் சீல் வைக்கப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை