உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பு --சாலையில் தேங்கி நிற்பதால் சிக்கல்

தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பு --சாலையில் தேங்கி நிற்பதால் சிக்கல்

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி மலையடிப்பட்டி குடியிருப்பு பகுதியில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ராஜபாளையம் நகராட்சி 18வது வார்டு பகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் செல்லும் சாலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் மூன்று நாட்களுக்கு முன் உடைப்பெடுத்து தண்ணீர் வீணாகி வருகிறது. அதிக அளவு வெளியேறி வருவதால் இப்பகுதி தெருவில் குளம் போல் குடிநீர் தேங்கியிருப்பதுடன் இவ் வழியாக கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் சிர மத்திற்கு உள்ளாகின்றனர். மூன்று நாட்களாக உடைப்பெடுத்து வெளியேறும் குழாயை சரி செய்வதுடன் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை