உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தை

பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தை

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் மீண்டும் பழைய நிலை ஏற்படாதவாறு பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ராஜபாளையம் சிங்கராஜா கோட்டை பெரிய தெரு கோதண்ட ராமசாமி கோயில் முன் பொது பாதையை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டப்பட்டு இருப்பது குறித்து தனிநபர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உத்தரவுபடி கடந்த வாரம் நகராட்சி அதிகாரிகள் பொது பாதையில் கட்டப்பட்டிருந்த 4 கடைகள், ஒரு ஆஸ்பெஸ்டாஸ் வீடு, 3 வீடுகளின் சுற்றுச்சுவர் ஆகிய ஏழு ஆக்கிரமிப்புகளை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றினர். ஆக்கிரமிப்பை அகற்றிய நிலையில் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் மீண்டும் ஆக்கிரமிக்கும் நிலை உள்ளதால் அகற்றப்பட்டதன் நோக்கம் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் சாலை அமைத்து பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ