இன்ஸ்டாவில் பிரபலமாகும் கூமாபட்டி நிஜத்தில் வேற மாதிரி
வத்திராயிருப்பு:சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஊட்டி, கொடைக்கானலை மிஞ்சும் வகையில் இருப்பதாக கூறி பிரபலம் அடையும் விருதுநகர்மாவட்டம் கூமாபட்டி, நிஜத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத கிராமமாக உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கூமாபட்டி பசுமையாக காணப்படும் ஒரு பேரூராட்சி பகுதியாகும். இங்கு நெல் சாகுபடி அதிகமாக நடக்கிறது. தென்னை மரங்கள் அதிகம் இருப்பதால் வெளி மாவட்டங்களுக்கு அதிகமாக தேங்காய் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் இந்த ஊர் ஊட்டி, கொடைக்கானலை மிஞ்சும் வகையில் இருப்பதாக கூறி இன்ஸ்டாகிராமில் வைரலானது. ஆனால் நிஜத்தில் கூமாபட்டியில் போதிய அடிப்படை வசதிகள் கிடையாது. கன மழை பெய்தால் மட்டுமே கான்சாபுரம் அத்தி கோயில் ஓடையில் நீர் வரத்து ஏற்படும். கொரோனா ஊரடங்கு காலம் முதல் பிளவக்கல் அணைக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. அங்குள்ள பூங்காவிலும் எந்தவித வசதிகளும் இல்லாமல் பெயரளவில் உள்ளது. இதனை ரூ.10 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் வந்தபோது அறிவித்து பல மாதங்கள் ஆன நிலையில் இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.பாதுகாக்கப்பட்ட குடிநீரோ , போதிய சுகாதார வளாகமோ கிடையாது. வீடியோ காட்சிகளில் பசுமையாக காணப்பட்டாலும் நடைமுறையில் நிஜத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத வேறு மாதிரி கிராமமாக தான் கூமாபட்டி உள்ளது......................* நம்பி வந்த முன்னாள் கலெக்டர் ஏமாற்றம்தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் நேற்று மதியம் கூமாபட்டிக்கு வந்தார். அங்கு வறண்ட நிலையில் உள்ள கொடிக்குளம் கண்மாயை பார்த்து அதிர்ச்சியுடன் ஏமாற்றமும் அடைந்தார்.* பொதுப்பணித்துறை எச்சரிக்கைபிளவக்கல் அணைக்கு மக்கள் வந்து செல்ல அனுமதி இல்லை. மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.