உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தவர் கைது

ஸ்ரீவி.,யில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தவர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த முகமது அஷ்ரப் 21, கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்துாரில் செப். 16ல் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பள்ளி வாசலை கடந்து சென்ற போது அங்கிருந்த இருவரில் ஒருவர், 'பாரத் மாதா கி ஜே என என் முன்பே கத்துவாங்களாம். அதை பார்த்துக்கிட்டு இருக்க, நான் என்ன சொம்பையா. ஸ்ரீவில்லிபுத்துாரில் வெடிகுண்டு வெடிக்கும்டா' என மிரட்டல் விடுத்தார். இதில் ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார், முகமது அஷ்ரப் 21 மற்றும் 17 வயது சிறுவன் மீது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான செயல்களை வழிபாட்டு ஊர்வலத்தில் கூறி அமைதியை குலைக்கும் செயலில் ஈடுபட்டதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடினர். அவர்களை கைது செய்யக்கோரி ஹிந்து முன்னணி சார்பில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று ராஜபாளையத்தில் முகமது அஷ்ரப்பை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை