உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அபராதம் செலுத்த முடியாமல் அவதி

அபராதம் செலுத்த முடியாமல் அவதி

அருப்புக்கோட்டை:போலீஸ் இணையதளம் 10 நாட்களாக செயல்படாததால் அபராதம் செலுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.மது அருந்தி ஓட்டுவது ,டூவீலர்களின் ஹெல்மெட் அணியாமல் செல்வது, சாலை விதிகளை கடைபிடிக்காமல் செல்வது, உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட பல விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை போலீஸ் இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். இந்த இணையதளம் பத்து நாட்களாக முடங்கியுள்ளது. இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லைசன்ஸ் புதுப்பித்தல், இன்சூரன்ஸ் கட்டுவது, வாகன கடனை முடித்தல் எப்.சி., எடுத்தல், பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி