உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவரை அடித்த தலைமையாசிரியர் உட்பட இருவர் சஸ்பெண்ட்

மாணவரை அடித்த தலைமையாசிரியர் உட்பட இருவர் சஸ்பெண்ட்

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவரை பிரம்பால் அடித்த தலைமையாசிரியர் செல்வராஜ் 52, உடற்கல்வி ஆசிரியர் கதிரேசன் 50, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். போலீசாரும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.திருச்சுழி அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இது அரசு உதவி பெறும் பள்ளி. நான்கு நாட்களுக்கு முன் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக வளாகத்தில் இருந்த மேஜை நாற்காலிகளை அந்தந்த இடத்தில் சேர்க்க மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறினர். மாணவர்கள் அந்த பணியைச் செய்யாமல் சக மாணவிகளிடம் பேசிக் கொண்டிருந்தனர்.இதையடுத்து தலைமையாசிரியர் செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியர் கதிரேசன், மாணவர்களை பிரம்பால் அடித்துள்ளனர். இதில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர் பெற்றோரிடம் கூறினார். பின் மாணவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.டி.இ.ஓ.,(இடைநிலை) சாந்தி, திருச்சுழி போலீசார் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியரிடம் விசாரித்தனர். மாணவரை பிரம்பால் அடித்ததாக அவரது தாயார் முத்தாட்சி திருச்சுழி போலீசில் புகாரும் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை