உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவக் கல்லுாரி பணியிடங்கள் நிரப்ப தீவிரம்

அரசு மருத்துவக் கல்லுாரி பணியிடங்கள் நிரப்ப தீவிரம்

விருதுநகர்:அரசு மருத்துவக்கல்லுாரிகளில் காலியாக உள்ள துணை முதல்வர், மருத்துவமனை கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப பட்டியல் தயாரித்து இம்மாதத்தின் இறுதிக்குள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுாரிகளிலும் துணை முதல்வர், கண்காணிப்பாளர் பணியிடங்கள் திறக்கப்பட்ட 2022 ஜன. 12 முதல் காலியாக இருந்தது. ஏற்கனவே உள்ள சில அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் காலியான துணை முதல்வர், மருத்துவமனை கண்காணிப்பாளர் பணியிடங்களில் உள்ளூர் மருத்துவர்களை பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்காக பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் பணியிடங்கள் நிரப்பப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி