மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலீஸ் அதிகாரி!
26-Jun-2025
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நதிக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் பட்டா மாறுதலுக்காக வெம்பக்கோட்டை தாலுகாவில் விண்ணப்பித்திருந்தார். பட்டா மாறுதல் குறித்து கேட்க அவர் நதிக்குடி கிராம நிர்வாக அலுவலகம் சென்றார். அங்கு இருந்த கிராம உதவியாளர் முருகராஜ் ரூ. 2000 லஞ்சம் கேட்டு பின் ரூ. 500 வாங்கியதாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.வீடியோவில் கிராம உதவியாளர் ரூ. 2000 வேண்டும். அனைவரிடமும் ஒரே மாதிரி தான் பணம் வாங்கப்படுகிறது,'' என்கிறார். அதற்கு அந்த நபர்,''என்னிடம் தற்போது ரூ. 500 மட்டுமே உள்ளது,'' எனக்கூறி அதை கொடுக்க கிராம உதவியாளர் வாங்கி தன் சட்டை பையில் வைத்துக் கொள்கிறார். மீதி பணத்தை நாளை காலையில் வாங்கிக் கொள்கிறேன் எனக்கூறி விட்டு நடந்து சென்ற காட்சி பதிவாகியுள்ளது.
26-Jun-2025