உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கால் நுாற்றாண்டாக வசதி செய்து தராத அதிகாரிகளுக்கு வாழ்த்து கூறிய கிராமத்தினர்

கால் நுாற்றாண்டாக வசதி செய்து தராத அதிகாரிகளுக்கு வாழ்த்து கூறிய கிராமத்தினர்

ராஜபாளையம்,: ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் இந்திரா நகர் பகுதியில் கால்நுரற்றாண்டாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஊர் மக்கள் சார்பில் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி பதாகை வைத்துள்ளனர்.ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா நகர். இப்பகுதியில் மகளிர் கழிப்பிடம் வேண்டி, செண்பகத் தோப்பு ரோட்டில் இருந்து இந்திரா நகர் வரை உள்ள ரோட்டில் தெருவிளக்கு, பொது குடிநீர் இணைப்பு, சுகாதாரமான குடிநீர் வேண்டி, எரியாத தெரு விளக்குகளுக்கு, சமுதாய கூடம் வேண்டி, நிராகரிக்கப் பட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை, தார் ரோடு வறுகால் வசதி உட்பட பல்வேறு வசதிகள் கேட்டு பல ஆண்டுகளாக மக்கள் பல்வேறு போராட்டம் நடத்தியும் இன்று வரை அரசு அதிகாரிகளும்,மக்கள் பிரதிநிதிகளும் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவ்வூர் மக்கள் வைத்த பதாகையில், தேச விடுதலை போராட்டம் போல கால் நுாற்றாண்டாக அடிப்படை வசதி வேண்டி போராடி வரும் இந்திரா நகர் மக்கள் சார்பில் அரசு அதிகாரிகளுக்கும், அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். அடிப்படை வசதி ஏதும் வழங்காமல் எங்கள் போராட்டம் நுாற்றாண்டை கடக்கட்டும் என்று கூட வாழ்த்துவீர்கள் போல. எங்கள் பகுதி மக்களின் மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுக் கொண்டு கூட எங்களுக்கான அடிப்படை வசதிகளை விரைந்து வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி