உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இன்ஸ்டாகிராமில் ஆபாசம் விருதுநகர் வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் ஆபாசம் விருதுநகர் வாலிபர் கைது

திண்டுக்கல்:இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு துவங்கி பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட விருதுநகர் வாலிபரை திண்டுக்கல் சைபர் கிரைம் பேலீசார் கைது செய்தனர்.தமிழகம் முழுவதும் சைபர் கிரிமினல்களை கைதுசெய்யும் விதம் ஒவ்வொரு ஆண்டும் 'திரை நீக்கு' பெயரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன்படி இந்தாண்டு 'திரை நீக்கு 2' எனும் பெயரில் ஜூன் 2, 3 ல் சைபர் கிரிமினல்களை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை சேர்ந்த விமல் 31 ,திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 23 வயது பெண் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு துவங்கி பெண் ஒருவரின் ஆபாச படங்களை பதிவேற்றியதுடன் அந்தக்கணக்கு மூலமாக பெண்ணின் உறவினர்களிடமும் கொச்சையாக பேசி உள்ளார். அப்பெண் திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப்பை சந்தித்து புகார் அளித்தார். விமலை திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ