மேலும் செய்திகள்
மண்டல அளவில் வாலிபால் போட்டி
26-Jun-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை விஷ்வாஸ் பள்ளி மாணவர்கள் பல ஊர்களில் மண்டல அளவில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்து உள்ளனர். சி.ஐ.எஸ். இ., கேம்ஸ், ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மண்டல அளவில் நடந்தது. நாகர்கோயிலில் நடந்த 17 வயதுக்குட்பட்ட சதுரங்க போட்டியில் பள்ளி மாணவர் தர்ஸ்வேஷ் ராஜ் 4ம் இடத்தையும், சஞ்சீவ் 6ம் இடத்தையும் பெற்றனர். 14 வயது பிரிவில் வட்டெறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் சர்வன் குமார் முதல் இடத்தை பெற்றார். சிவகாசியில் நடந்த 16 வயதுக்குட்பட்ட வில்வித்தை போட்டியில் விஷால் 3 ம் இடத்தையும், ஹரிஷ் 4 ம் இடத்தையும் பெற்றனர். ஸ்கேட்டிங் போட்டியில் 500 மீட்டர் மற்றும் ஆயிரம் மீட்டர் பிரிவில் அவனிஷ் 2ம் இடத்தை பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிச் செயலாளர் பழனிவேல் ராஜன், இயக்குனர் மகாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
26-Jun-2025