உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை அமைச்சர்கள் சந்திக்காதது ஏன்? மார்க்சிஸ்ட் பாலபாரதி கேள்வி

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை அமைச்சர்கள் சந்திக்காதது ஏன்? மார்க்சிஸ்ட் பாலபாரதி கேள்வி

விருதுநகர்; விருதுநகர் அரசு மருத்துவமனையில் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பின் பாலபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:9 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இதில் நிவாரணமாக ரூ. 5.5 லட்சம் ஆலை தரப்பில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. பலியானவர்களின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டபோது எஸ்.பி., கண்ணனின் பேச்சு சரியானதாக இல்லை. தமிழகத்தில் போலீஸ் நிர்வாகம் பெரும் சர்ச்சையாக மாறிவருகிறது.உடனடியாக உடல்களை எடுத்துச் செல்லுங்கள் என கூறுவது யுத்த களத்தில் இருப்பது போல உள்ளது.மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் இருந்தும் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினரை இதுவரை நேரில் வந்து பார்க்கவில்லை. பட்டாசு தொழில் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்த வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை