உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு பஸ்சில் நகை திருடிய பெண் கைது

அரசு பஸ்சில் நகை திருடிய பெண் கைது

அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே மிதிலைகுளத்தை சேர்ந்த முருகேஸ்வரி, 33, வங்கியில் அடமான வைத்திருந்த தன் நகையை மீட்டு, அருப்புக்கோட்டையிலிருந்து மே 9 அன்று பஸ்ஸில் ஏறி ஊருக்கு சென்ற போது அவருடைய நகை திருடு போனது. அருப்புக்கோட்டை டவுன் போலீசார் அந்தப் பகுதி சிசிடிவி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர். அதில் கோவில்பட்டி மந்திதோப்பை சேர்ந்த பாலாத்தாள், 45, சந்தேகப்படும்படியாக பஸ் ஸ்டாப்பில் அங்கும், இங்கும் அலைவதுடன், பஸ்சில் ஏறி இறங்குவது தெரிய வந்தது. அவரை காந்திநகர் பஸ் ஸ்டாப்பில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 2 1/2 பவுன் நகையை பறிமுதல் செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை