உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்

விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வு முடிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை சுத்தப்படுத்தி, ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இங்கு நடைபெறும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் சுடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், வட்ட சில்லு, சூது பவள மணி, தங்க மணி உள்ளிட்ட 5003 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுடு மண்ணால் ஆன முழுமையான பானைகள், உடைந்த பானை ஓடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளது. இந்நிலையில் இங்கு அகழாய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் பானை ஓடுகளை பிரித்து சுத்தப்படுத்தி, ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், இங்கு முன்னோர்கள் தொழிற்கூடம் நடத்தியதற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளது. அதன்படி பானைகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை சுத்தப்படுத்தி அதில் ஏதேனும் குறியீடுகள், எழுத்து உள்ளதா என ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் முன்னோர்களின் காலத்தை துல்லியமாக கண்டறியலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

c.mohanraj raj
மே 25, 2025 13:40

ஆயிரக்கணக்கான கோயில்களையும் மண்டபங்களையும் கட்டி வைத்திருக்கிறான் அதை விட்டுவிட்டு பூமிக்கு அடியில் தேடும் இவர்களை என்ன சொல்வது? கோவிலை எல்லாம் திராவிட அரசு நாசமாக்குகிறது


முக்கிய வீடியோ