மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ராஜபாளையம்: ராஜபாளையம் சம்பந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் 45, மனைவி இரண்டு மகள்கள் உள்ளனர். காந்தி சிலை ரவுண்டானா அருகே ஜவுளி கடை ஷோரூமில் பணியாளர்களுக்கான உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தில் பணிபுரிகிறார். நேற்று மதியம் ஸ்விட்ச் போர்டில் கை வைத்த போது மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டு இறந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.