உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பாட்டிலால் தாக்கி தொழிலாளி கொலை

 பாட்டிலால் தாக்கி தொழிலாளி கொலை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி மாரியப்பனை 33, பாட்டிலால் தாக்கி கொலை செய்தவர்களை போலீசார் தேடுகின்றனர். ராஜபாளையம் வடக்கு மலையடிப் பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். ஆறு ஆண்டுகளாக கருத்து வேறுபாட்டால் மனைவி 3 மகள்களுடன் கணவரை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று காலை 10:00 மணிக்கு ராஜபாளையம்- அழகாபுரி தக்காளி தோப்பு அருகே தலையில் ரத்த காயத்துடன் உடலில் பாட்டி லால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் மாரியப்பன் உடல் கிடந்தது. வடக்கு போலீசார் விசாரணையில், மாரியப்பன் வழக்கமான நண்பர்கள் இருவருடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் தலையில் தாக்கியும் உடலில் குத்தியும் கொலை செய்துள்ளது தெரிகிறது. தொடர்புஉடைய நபர்களை தேடி வருகிறோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை