உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதவை பெண்ணிடம் நிலம் அபகரிப்பு: தி.மு.க., செயலாளர் மீது புகார்

விதவை பெண்ணிடம் நிலம் அபகரிப்பு: தி.மு.க., செயலாளர் மீது புகார்

கரூர்: கரூர் அருகே விதவை பெண்ணிடம் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக தி.மு.க., செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தையடுத்த புஞ்சை புகளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மறைந்த நல்லப்பன் மனைவி சோலியம்மாள். தனது மகள் சித்ரா மற்றும் மகன் அசோக்குமாருடன் வசித்து வந்தார். இதனிடையே சோலியம்மாளுக்கு சில லட்சம் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, புஞ்சை புகளூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனக்கு சொந்தமான ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை விற்று கடனை அடைக்க, அப்பகுதி தி.மு.க., நகரச்செயலாளர் சாமிநாதனுக்கு பவர் அளித்துள்ளார். இந்நிலையில், சோலியம்மாளுக்கு கடனை அளிக்க ரூ. 15 லட்சம் மட்டும் அளித்து விட்டு, பவர் பத்திரத்தை தனது மகள் ரேவதி பெயருக்கு சாமிநாதன் மாற்றம் செய்து அபகரித்துள்ளார். இதையடுத்து சாமிநாதன் மீது போலீசிடம் சோலியம்மாள் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை