ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: தி.மு.க., நிர்வாகி இருவர் சரண்
மதுரை: மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில், அவனியாபுரம் தி.மு.க., செயலாளர் இப்ராகிம் சுல்தான் சேட், 32, திருப்பரங்குன்றம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், 43, ஆகியோர் நேற்று சரணடைந்தனர். அவர்களை ரிமாண்ட் செய்து கோர்ட் உத்தரவிட்டது. இக்கொலை வழக்கில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொட்டு சுரேஷ், எஸ்ஸார் கோபி, இவரது சகோதரர் ஈஸ்வரன் உட்பட ஒன்பது பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். எஸ்ஸார் கோபி சகோதரர் மருது, இப்ராகிம் சுல்தான் சேட், கார்த்திகேயன் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இவ்வழக்கில் முன் ஜாமின் கோரி இப்ராகிம் சுல்தான் சேட், கார்த்திகேயன் ஆகியோர் ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். கீழ் கோர்ட்டில் சரணடைய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. முதன்மை மாவட்ட கோர்ட்டில் நேற்று இருவரும் சரணடைந்தனர். இருவரையும் செப்.,10 வரை ரிமாண்ட் செய்து நீதிபதி ராஜசேகரன் (பொறுப்பு) உத்தரவிட்டார்.