உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாழ்த்தப்பட்டோருக்கு மீண்டும் சேர்மன் பதவிதடை ‌கோரி முஸ்லிம்கள் ஐ‌கோர்ட்டில் மனு

தாழ்த்தப்பட்டோருக்கு மீண்டும் சேர்மன் பதவிதடை ‌கோரி முஸ்லிம்கள் ஐ‌கோர்ட்டில் மனு

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை பொதுப் பிரிவில் இருந்து தாழ்த்தப்பட்டோருக்கு மாற்றியதை தடை öŒ#யக் @காரி, முஸ்லிம்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி, 1996, 2001ம் ஆண்டு, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. 1996ம் ஆண்டு தி.மு.க.,வைச் சேர்ந்த கோமதி, 2001ம் ஆண்டு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அம்புஜம் தலைவராக இருந்தனர்.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மறுசீரமைப்பின் படி, 2006ல் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி பொதுப் பிரிவிற்கு மாற்றப்பட்டது. அப்போது, நகராட்சித் தலைவரை, கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் புதிய முறை கொண்டு வரப்பட்டது.

அப்‌போது, தி.மு.க., கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. தி.மு.க.,வின் முடிவால், பொதுப் பிரிவாக இருந்தும், கூட்டணி பலத்தால், மொத்தம் உள்ள 30 கவுன்சிலர்களில், ஒரே ஒரு கவுன்சிலர் மட்டுமே இருந்த வி.சி., கட்சியில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் ‌சேர்ந்த கெய்க்வாட் பாபு தலைவரானார்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில், தலைவர் பதவி பொது என்பதால், அனைத்து கட்சியைச் ‌சேர்ந்த பலர், ஆர்வமுடன் விருப்ப மனு செய்தனர். நகராட்சியில் உள்ள 32 ஆயிரம் வாக்காளர்களில், 9,000 பேர் முஸ்லிம்கள். எனவே, தலைவர் பதவிக்கு, கட்சி பாகுபாடியின்றி ஒரு முஸ்லிமை நிறுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டுமென, ஜமாத்தில் முடிவு செய்யப்பட்டது. ‌மேலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், முஸ்லிம்களை கவுன்சிலர்களாக வெற்றி பெறச் செய்ய முடிவு செய்து அதற்கான பணியிலும் தீவிரம் காட்டினர்.

இந்நிலையில், திடீரென நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி, பொதுவில் இருந்து தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. பத்து ஆண்டுகளில் மாற்ற வேண்டியதை, ஐந்து ஆண்டியிலேயே மாற்றியதால், முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பொதுப் பிரிவுக்கு மாற்ற வலியுறுத்தி, 20ம் ‌தேதி, முஸ்லிம்கள் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுப் பிரிவிற்கு மாற்றாவிட்டால், தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு பொதுப் பிரிவை தாழ்த்தப்பட்டோருக்கு மாற்றியதை தடை செய்ய வேண்டுமென, முஸ்லிம் சமுதாயத்தினர் சென்னை ஐ‌கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவை கோர்ட் ஏற்குமா என்பதை பொறுத்தே வரும் உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம்களின் பங்கேற்பு இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை