உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாவட்ட மற்றும் மாநில விளையாட்டு போட்டி தேர்வுகளில் முறைகேடு

மாவட்ட மற்றும் மாநில விளையாட்டு போட்டி தேர்வுகளில் முறைகேடு

பள்ளிக்கல்வித் துறை மூலம், மாவட்ட மற்றும் மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் பாரபட்சம், முறைகேடு நடப்பதாக மாணவர்கள், ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், முப்பது பழைய மற்றும் புதிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.சில நேரங்களில், விளையாடுவதற்கு அடிப்படைத் தகுதியில்லாதவர்கள் கூட சிபாரிசு மூலமோ, பணத்தை செலவழித்தோ சேருகின்றனர். விளையாட்டில் ஆர்வமில்லாத பிள்ளைகளைக் கூட, விளையாட்டு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் சிலர், எளிதாக மாநிலப் போட்டிகளுக்கு அனுப்புகின்றனர்.

பிளஸ் 2 மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், விளையாட்டு கோட்டா மூலம் எளிதாகக் கல்லூரிகளில் சேரலாம். கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல் அனைத்து வகை கல்லூரிச் சேர்க்கைகளிலும், கேட்ட பாடப்பிரிவு கிடைத்து விடுவது தான் இதற்குக் காரணம். இதைத் தவறாகப் பயன்படுத்துவதால், உண்மையான, திறமையான விளையாட்டு வீரர்களுக்கு, வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. தனித்திறன் போட்டிகளை விட, குழு விளையாட்டுப் போட்டிகளில் அதிக முறைகேடு நடக்கிறது.விளையாட்டுப் போட்டிகள் நடத்த பணம் கொடுக்கும் ஸ்பான்ஸர்கள், திறமையில்லாத மாணவர்களைச் சேர்க்கச் சொல்லி கட்டாயப் படுத்துகின்றனர். சில பெற்றோர், மாநில விளையாட்டுப் போட்டிகளில், தங்கள் பிள்ளைகள் இடம்பெற வேண்டும் என்பதற்காக, லஞ்சம் தருகின்றனர். இன்னும் சில இடங்களில், தங்களது செல்வாக்கு, அரசியல் பலத்தின் மூலம், மாநிலப் போட்டிகளில் வாய்ப்பு பெறுகின்றனர். இதனால், போட்டிகளின் மீதான, திறமையின் மீதான நம்பகத் தன்மை குறைந்துவிடுகிறது.போட்டிகளை முறைப்படுத்தி, நேர்மையான நடுவர்களையும், பயிற்சியாளர்களையும் நியமிப்பதன் மூலம் திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும்.நமது சிறப்பு நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ