உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக ஐந்து நீதிபதிகள் விரைவில் நியமனம்

சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக ஐந்து நீதிபதிகள் விரைவில் நியமனம்

புதுடில்லி : சுப்ரீம் கோர்ட்டிற்கு, விரைவில் ஒரு பெண் நீதிபதி உட்பட, ஐந்து புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில், அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 31. தற்போது, 26 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இவர்களில், இரண்டு பேர் இந்த மாதத்திலும், அடுத்த மாதத்தில், மேலும் இரண்டு பேரும் ஓய்வு பெறுகின்றனர்.அதேநேரத்தில், 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், ஒரு பெண் நீதிபதி உட்பட, புதிதாக ஐந்து நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி கேகர், குஜராத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி முகோபாத்யாய், மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சனா தேசாய் ஆகியோரை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கான உத்தரவுகளில், கடந்த சனிக்கிழமை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கையெழுத்திட்டுள்ளார்.

இவர்கள் தவிர, டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கேரள ஐகோர்ட் நீதிபதி செலமேஸ்வர் ஆகியோரையும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க, சுப்ரீம் கோர்ட் குழு பரிந்துரை செய்து, அந்த பைல்கள் விரைவில் சட்ட அமைச்சகத்திற்குச் செல்ல உள்ளன.ரஞ்சனா தேசாய் நியமனம் உறுதி செய்யப்பட்டால், அவரையும் சேர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு பெண் நீதிபதிகள் இடம் பெறுவர். ஏற்கனவே, உள்ள பெண் நீதிபதியின் பெயர் ஜியான் சுதா மிஸ்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ