உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காமன்வெல்த் ஊழல்: லலித் பனோட்டின் ஜாமின் மனு தள்ளுபடி

காமன்வெல்த் ஊழல்: லலித் பனோட்டின் ஜாமின் மனு தள்ளுபடி

புதுடில்லி:காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, போட்டி ஏற்பாட்டு குழுவின் செயலர் லலித் பனோட்டின் ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.கடந்த பிப்ரவரியில் கைதான பனோட், தனக்கு ஜாமின் அளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் பன்சால், கோகலே ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. லலித் பனோட்டின் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிபதிகள், தகுந்த கீழ் கோர்ட்டை அணுகும்படி, உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !