உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாலேகான் குண்டு வெடிப்பு: பிரக்யா சிங் மனு தள்ளுபடி

மாலேகான் குண்டு வெடிப்பு: பிரக்யா சிங் மனு தள்ளுபடி

புதுடில்லி:மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில், 2008ல் குண்டு வெடித்தது. இதில், ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரை, மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமின் அளிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பிரக்யா சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பன்சால், கோகலே ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. பிரக்யா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,''பயங்கரவாத எதிர்ப்புப் படையின் காவலில் இருந்தபோது, பிரக்யா சிங், உடல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளானார். மோசமான வார்த்தைகளாலும் அவரைத் திட்டினர். அவருக்கு ஜாமின் அளிக்க வேண்டும்'' என்றார்.இதையடுத்து, நீதிபதிகள்,'இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல' எனக் கூறி, தள்ளுபடி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !