உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறிவித்த படி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை: பொன் ராதாகிருஷ்ணன்

அறிவித்த படி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை: பொன் ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: இலங்கை தமிழர்களுக்கு கட்டிகொடுப்பதாக கூறிய வீடுகளை இன்னும் மத்திய அரசு கட்டிக்கொடுக்கவில்லை என்று மாநில பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ. சார்பில் இலங்கை தமிழர்களுக்காக உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்யும் பணியை நாகர்கோவிலில் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் தமிழ் சமுதாயத்தை கருவறுக்கும் வகையில் மோசமான போர் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டது. பல ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டனர். திறந்த வெளி அகதிகள் முகாம்களின் தமிழ் குடும்பங்கள் அவதிப்பட்டு வருகிறது. இவர்களுடைய மறுவாழ்வுக்காக பா.ஜ., சார்பில் திரட்டப்படும் நிதி சர்வதேச சேவா சங்கம் மூலம் நேரடியாக தமிழர்களுக்கு வழங்கப்படும். தமிழர்களின் பகுதியில் சீரமைப்பு பணிகளுக்காகவும், அவதிப்படும் தமிழர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். தமிழர்களை கொன்று குவித்த போருக்கு மத்திய அரசும் உதவி செய்துள்ளது என்பதால் இனியும் மத்திய அரசிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க முடியாது. 2009-ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் 50 வீடுகள் கூட கட்டிக்கொடுக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை நவீன ஆஸ்பத்திரியாக மாற்ற தமிழக அரசு எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. மககள் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடம் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதுதான் பா.ஜ.,வின் நிலை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ