உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு: அழகிரிக்கு கோர்ட் உத்தரவு

பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு: அழகிரிக்கு கோர்ட் உத்தரவு

மதுரை:மதுரை அருகே பொறியியல் கல்லூரிக்கு பாசன கால்வாயினை ஆக்கிரமி்ப்பு செய்தது தொடர்பாக கல்லூரி அறக்கட்டளை நிர்வாகியும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி உள்ளிட்டோருக்கு மதுரை கலெக்டர் அனுப்பிய சம்மன் விவகாரத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆஜராக தேவையில்லை என மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவிற்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலம் சிவரக்கோட்டை அருகே கரிசல்குளம் அருகே மு.க. அழகியின் பொறியியல் கல்லூரி, பாசன கால்வாயினை ஆக்கிரமித்து சுவர் கட்டியுள்ளதாக , ராமலிங்கம் என்பவர் கொடு்த்த புகாரின் பேரில் ம‌துரை கலெக்டர் சகாயம் , மு.க.அழகிரி,காந்தி அழகிரி, தயா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தார். இதில் வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என கூறப்பட்டிருந்தது.இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி மு.க.அழகிரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேசன் ஆகியோர் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதுவரை கலெக்டர் முன் ஆஜராக தேவையில்லை எனக்கூறி வழக்கினை நாளை (16-ம் தேதி) தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி