மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 39
சென்னை:''தமிழக உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.க.,கொங்கு முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிடும்'' என, அக்கட்சியின் அகில இந்திய செயலர் முரளிதரராவ் தெரிவித்தார்.
பா.ஜ.,வின் மாநில செயற்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின், அகில இந்திய செயலர் முரளிதரராவ் கூறியதாவது:தமிழக உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ., கொங்கு முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிடுகிறது. ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை, பா.ஜ., மேற்கொள்ளும். உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறி, அவரைப் பதவி நீக்கம் செய்ய, பா.ஜ., பிரதமரை வலியுறுத்தும். கூடங்குளத்தில், மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து தரவேண்டும்.இவ்வாறு, முரளிதரராவ் கூறினார்.கூட்டத்தில், அகில இந்திய பா.ஜ., அமைப்புச் செயலர் ராம்லால், தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., முன்னாள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
3 hour(s) ago | 3
3 hour(s) ago | 2
6 hour(s) ago | 39