உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ஒரு பெருமாள் -16

தினமும் ஒரு பெருமாள் -16

துன்பம் தீர...

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளது துடுப்பதி. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மகானின் பிருந்தாவனமே, தற்போது கோயிலாக மாறியுள்ளது. இங்குள்ள பெருமாளை வழிபட்டால் மனக்குறை, துன்பம் தீரும். இவர் பலருக்கும் குல தெய்வமாக இருக்கிறார். வேண்டுதல் நிறைவேறியதும் முடி காணிக்கை, காது குத்துதல் போன்ற நேர்சைகளை செய்கிறார்கள். நீல நாயகி என்னும் பெயரில் தாயார் அருள்கிறார்.உற்ஸவராக கரிவரதராஜர் உள்ளார். கருவறை சுவரினை சுற்றி புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. விநாயகர், கருடாழ்வார், நாகராஜருக்கு சன்னதிகள் உள்ளன.இக்கோயில் அருகே பழமையான வேப்ப மரம் ஒன்று உள்ளது. அதை வன வெங்கடேச பெருமாளாக எண்ணி வழிபடுகிறார்கள். திருப்பணியின்போது ஒரு அறையில் பூஜை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பெருந்துறையில் இருந்து 6 கி.மீ., நேரம்: காலை 7:00 - 10:00 மணிமாலை 6:00 - 7:30 மணி தொடர்புக்கு: 99766 94526, 97884 77277 அருகிலுள்ள தலம்: காசி விஸ்வநாதர் நேரம்: காலை 7:00 - 10:00 மணிமாலை 6:00 - 7:30 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !