உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகள் திருமணம்: ஆயுள் தண்டனை கைதிக்கு "பரோல் :ஐகோர்ட் கிளை உத்தரவு

மகள் திருமணம்: ஆயுள் தண்டனை கைதிக்கு "பரோல் :ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை : மானாமதுரையில் நடக்கும் மகள் திருமணத்தில் பங்கேற்க, திருச்சி சிறை ஆயுள் தண்டனை கைதி மச்சக்காளைக்கு 3 நாள் 'பரோல்' வழங்கி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மச்சக்காளை குடும்ப தகராறில் மருமகன் பாலகிருஷ்ணனை 2000ல் கொலை செய்தார். இவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை முதன்மை செஷன்ஸ் கோர்ட் 2001ல் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மச்சக்காளை, ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, 10 ஆண்டு சிறையாக குறைக்கப்பட்டது.மச்சக்காளை மகள் நித்யாவுக்கு செப்., 8ல் மானாமதுரையில் திருமணம் நடந்தது. இதில் பங்கேற்க அவரை பரோலில் விடக் கோரி மனைவி தமிழ்செல்வி மனு செய்தார். மனு நீதிபதி ஆர்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சிவ.அய்யப்பன், ஜெயா இந்திரா பட்டேல் வாதிடுகையில், ''மனுதாரருக்கு ஒரே மகள். திருமணம் தொடர்பான உறவுமுறைகளை மச்சக்காளை செய்ய வேண்டும்,'' என்றனர். அதை ஏற்று, மச்சக்காளையை செப்., 9 முதல் 11 வரை பரோலில் விட அனுமதிக்கும்படி திருச்சி சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். செப்., 11 ல் சிறை கண்காணிப்பாளர் முன் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி