உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேடப்படும் மில் அதிபர் சென்னையில் பதுங்கல்

தேடப்படும் மில் அதிபர் சென்னையில் பதுங்கல்

கோவை: கோவை, ஒண்டிபுதூரில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த வழக்கில், தலைமறைவான உடுமலை மில் அதிபரை தனிப்படை போலீசார் சென்னையில் தேடுகின்றனர். திருச்சி,பொன்மலையைச் சேர்ந்தவர் சோமசுந்தரம், 43. பழைய பகை காரணமாக, கோவையில், நடுரோட்டில், சோமசுந்தரம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில், ரவுடி கட்டைராஜா, செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான, உடுமலை தொழில் அதிபர் மோகன், சென்னையில் பதுங்கி இருப்பதாகத் தகவல் தெரிந்ததால், போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி