உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., அறிவிப்பு: விஜயகாந்த் பதிலளிக்க மறுப்பு

அ.தி.மு.க., அறிவிப்பு: விஜயகாந்த் பதிலளிக்க மறுப்பு

மதுரை:கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் வேட்பாளர்களை, அ.தி.மு.க., அறிவித்தது குறித்து கருத்து தெரிவிக்க, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறுத்துவிட்டார்.சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் இக்கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில், 'எங்களுக்கு பாலபாடம் நடத்த வேண்டாம்' என்று, தே.மு.தி.க.,வுக்கு எதிராக, முதல்வர் ஜெயலலிதா கோபமாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது, கூட்டணி பிளவுக்கு அச்சாரமாக இருக்கலாம் என கருதப்பட்டது.சட்டசபைத் தேர்தலின் போது, கூட்டணிக் கட்சிகளை ஆலோசிக்காமல், வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்தது போல், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களையும், அ.தி.மு.க., அறிவித்தது. இது, கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து, தே.மு.தி.க., தரப்பில், இதுவரை எந்த பதிலும் வராத நிலையில், கட்சித் தலைவர் விஜயகாந்த், நேற்று மதுரை வந்தார். பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''இவர்களது சிகிச்சை குறித்து, அடிக்கடி போன் மூலம் தகவல் கேட்டு தெரிந்து கொண்டேன். தரமான சிகிச்சை அளிக்குமாறு டீனிடம் கூறியுள்ளேன்'' என்றவரிடம், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., எடுத்த முடிவு குறித்துக் கேட்ட போது, ''ஆறுதல் சொல்ல வந்தேன். அரசியல் பேச வரவில்லை'' என முடித்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி