உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளாட்சித் தேர்தலில் கூடைச் சின்னம் நீக்கம்

உள்ளாட்சித் தேர்தலில் கூடைச் சின்னம் நீக்கம்

தேனி : உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்களில், கூடைச் சின்னம் நீக்கப்பட்டுள்ளது.சட்டசபைத் தேர்தலின் போது, சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களில், கூடைச் சின்னம் இடம்பெற்றிருந்தது. இச்சின்னம், தே.மு.தி.க.,வின் முரசு சின்னத்தைப் போல காட்சியளித்ததால், குழப்பம் ஏற்பட்டது.கூடைச் சின்னங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அதிக ஓட்டுகள் பெற்றனர். இவை, தங்கள் வேட்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் என, தேர்தல் கமிஷனிடம், தே.மு.தி.க., முறையிட்டது.இதையடுத்து, தற்போது உள்ளாட்சித் தேர்தலில், கூடைச் சின்னம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை