உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

சென்னை: மாடியில் மொபைலில் பேசியபடி, தவறி கீழே விழுந்தவர் பரிதாபமாக பலியானார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் துரை, 24. இவரும், இவருடைய அண்ணன் டேனியும் அண்ணாசாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் வெல்டர் சாலையில் உள்ள குடியிருப்பில் 2வது மாடியில் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 2வது மாடியில் தங்கியிருந்த துரை மொபைலில் பேசிக் கொண்டிந்தார். அப்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த துரையை உடனடியாக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறிவிடவே, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், போகும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து, அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி