உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்ட்டின் ஜாமின் மனு வரும் 26க்கு ஒத்திவைப்பு

மார்ட்டின் ஜாமின் மனு வரும் 26க்கு ஒத்திவைப்பு

கோவை: மில் அபகரிப்பு வழக்கில், லாட்டரி அதிபர் மார்ட்டின் ஜாமின் மனு விசாரணை, கோர்ட் புறக்கணிப்பில் இருந்த வழக்கறிஞர்களின், 'குறுக்கீட்டால்' ஒத்திவைக்கப்பட்டது. நேற்று, கோவையில் கோர்ட் புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டதால், மார்ட்டின் சார்பில் ஜாமின் கேட்டு, சென்னை வழக்கறிஞர்கள் ஆஜராகினர். மனு விசாரணையின் போது, கோவை வழக்கறிஞர்கள் சிலர், 'கோர்ட் புறக்கணிப்பு இருக்கும் போது எப்படி ஆஜராகலாம்?' என வாதிட்டனர். இதைத் தொடர்ந்து, ஜாமின் மனு விசாரணை, வரும் 26க்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விவரம்: கணபதியைச் சேர்ந்தவர் நரஹரி செட்டி; மில் அதிபர். இவருக்குச் சொந்தமான 125 கோடி ரூபாய் மதிப்புள்ள மில்லை அபகரித்தது தொடர்பாக, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்ததில், லாட்டரி அதிபர் மார்ட்டினும், இவரது உறவினர் பெஞ்சமினும் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !