| ADDED : செப் 17, 2011 11:09 PM
கொடைக்கானல்: சீனாவில்மட்டுமே விளையக்கூடிய அதிக சுவையுள்ள, 'மேன்டரிங்' ஆரஞ்சு, தற்போது கொடைக்கானலிலும் விளைந்துள்ளது.
கீழ்மலைப்பகுதியான பண்ணைக்காடு, தாண்டிக்குடி பகுதியில் எலுமிச்சை, கடாநார்த்தை வகையை சேர்ந்த அதிக புளிப்புத்தன்மையுள்ள ஆரஞ்சுகள் விளைகிறது. சுவை அதிகம் இல்லாதது, குறைந்தலாபம் என்பதால் விவசாயிகள் அதிகளவில் பயிரிடவில்லை. இந்நிலையில், சீனாவிற்கு நிகராக தரைப்பகுதியிலிருந்து 800 மீட்டரிலிருந்து 1500 மீட்டர் உயரமுள்ள, மிதமான குளிர்நிலவும் கொடைக்கானல் கீழ்மலை, ஏற்காடு, குன்னூர் மலைப்பகுதியை தேர்ந்தெடுத்து, தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பல ஆயிரம் எக்டேர்பரப்பளவில் 'மேன்டரிங்' ஆரஞ்சு சில ஆண்டுகளுக்கு முன் நடவு செய்யப்பட்டன. பருவநிலை அடைந்தும், எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. இதனால் தளராத தோட்டக்கலைத்துறையினர், மண்ணின் தன்மையை ஆராய்ந்து இயற்கை உரங்கள் வழங்கி தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதன்பயனாக தற்போது பழங்கள் காய்த்துக்குலுங்குகின்றன. நவம்பர், டிசம்பர் சீசன் என்பதால், தற்போதே ஆர்டர்கள் குவிந்ததால், விவசாயிகளை மகிழ்ச்சியில் உள்ளனர். தோட்டக்கலை உதவிஇயக்குனர் கி÷ஷார் கூறியதாவது: கொடைக்கானலில் முதன்முதலாக 'மேன்டரிங்' ஆரஞ்சு பழங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதிக லாபம் தரக்கூடிய பணப்பயிர் என்பதால் விவசாயிகளுக்கு நாற்றுகள், உரங்கள் வழங்கி பயிரிட ஊக்களித்து வருகிறோம், என்றார்.