உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்கூட்டியே விற்பனை செய்துவிட்டு கண்துடைப்புக்கு கவுன்சிலிங் நடத்துவதா?

முன்கூட்டியே விற்பனை செய்துவிட்டு கண்துடைப்புக்கு கவுன்சிலிங் நடத்துவதா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்கூட்டியே நர்ஸ் பணியிடங்களை விற்பனை செய்துவிட்டு, கண்துடைப்புக்காக இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுவதாக, சீனியர் நர்ஸ்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அரசு மருத்துவமனைகளில் உருவாகும் காலி பணியிடங்களை, பொது கவுன்சிலிங் வாயிலாக, மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை நிரப்பி வருகிறது.இந்தாண்டுக்கான பொது கவுன்சிலிங், வரும், 11, 12ம் தேதிகளில், அந்தந்த சுகாதார மாவட்டங்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற உள்ளது.இடைத்தரகர்இதில், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், காலி பணியிடங்கள் முன்கூட்டியே விற்பனை செய்யப்பட்டு, கண்துடைப்புக்காக கவுன்சிலிங் நடத்தப்படுவதாகவும், நர்ஸ்கள் குற்றம்ச்சாட்டி உள்ளனர்.இதுகுறித்து, சீனியர் நர்ஸ்கள் கூறியதாவது:நர்ஸ் பணியிட மாறுதல்களை, மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குனரகம் தான் மேற்கொள்கிறது. இதற்கு முன், அ.தி.மு.க., ஆட்சியில், இடைத்தரகர்கள் வாயிலாக பணியிட மாறுதலுக்கு பணம் பெறப்பட்ட நிலையில், தற்போது அங்குள்ள அதிகாரிகள் நேரடியாகவே பணம் கேட்கும் நிலை உள்ளது.மருத்துவ தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக, புதிதாக பணிக்கு சேர்ந்தவர்கள், தங்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல, 6 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை கொடுத்து, முன்கூட்டியே இடங்களை பெற்று விட்டனர்.தற்போது, கணக்கு காட்டுவதற்கு, பணியிட மாறுதல் கவுன்சிலிங் அறிவித்துள்ளனர்.எவ்வளவு இடங்கள், எந்தந்த பகுதிகளில் காலியாக உள்ளன போன்ற தகவல்களை தெரிவிக்கவில்லை. மாறாக, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள், நீலகிரி, நாகை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே, காலி பணியிடங்கள் இருப்பதாகக் காட்டப்படும்.தென்மாவட்டங்களில் உள்ள இடங்கள் பெரும்பாலும், கவுன்சிலிங்கிற்கு முன் விற்பனை செய்யப்படுகின்றன.இதனால், பணம் இருப்பவர்கள் மட்டுமே, சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. எங்களை போன்ற பணவசதி இல்லாதவர்கள், பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில், ஒரே இடத்தில் பணிபுரிகிறோம்.பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும், சீனியர் நர்ஸ்கள் பாதிக்கப்படுகிறோம்.வெளிப்படைத்தன்மைஅரசு டாக்டர்கள் பணியிட மாறுதலில், எப்படி வெளிப்படைத்தன்மையுடன் எவ்வளவு இடங்கள், எந்தெந்த பகுதிகள் என தெரிவிக்கப்படுகிறதோ, அதேபோல, நர்ஸ்கள் பணியிடங்களையும், கவுன்சிலிங்கிற்கு முன் அறிவிக்க வேண்டும்.மேலும், சீனியாரிட்டி அடிப்படையில், பணியிட மாறுதல் வழங்கும் வகையில், மாநில அளவில் ஒரே இடத்தில் கவுன்சிலிங் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், 'நர்ஸ் பணியிடங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறுவது தவறு. காலிப்பணியிட விபரம், பொது கவுன்சிலிங்கில் வெளியிடப்படும். வெளிப்படை தன்மையுடன் தான் பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

M.R. Sampath
நவ 10, 2024 07:15

இந்நாட்டு மக்கள் குறிப்பாக தமிழ் நாட்டு மக்கள் கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்களாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் லஞ்சம் கொடுத்தால் ஒழிய அரசு அலுவலகங்களில் எந்த ஒரு காரியமும் நிறை வராது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். அவர்கள் தேர்ந்தெடுத்த கட்சி/வேட்பாளர்கள் மேற்படி கூறிய லஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களாக இருப்பதால் அவர்களிடமிருந்து நேர்மையை எதிர் பார்ப்பது மதியீனம். இந்த நிலைமை திருந்த வேண்டும் என்றால் பொது மக்கள் முதலில் நேர்மையை கடை பிடிக்க வேண்டும். அவ்வாறு நேர்மையை கடை பிடிக்கும் கட்சி / வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வினை விதைத்தால் வினைதான் முளைக்கும். அடுத்த தேர்தலிலாவது நேர்மையான கட்சி/ வேட்பாளர்களுக்கு வாக்களித்து தாங்களும் நேர்மையை கடைப் பிடித்தால்தான் நிலைமை சரியாகும்.


Ram pollachi
நவ 09, 2024 17:50

அவங்க அடிக்கிற கொட்டமும், பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறையை பார்க்கும் போது இவர்கள் உண்மையாக சேவை செய்வார்களா என்ற வினா எழுகிறது... நோயாளிகளை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்....


vkpuram madhavan
நவ 09, 2024 17:00

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் கூட முரண்தான். பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் 3000+ என்றால் அந்த பட்டியல் வெளியிட வேண்டும். பட்டியலில் காணப்படும் காலிப்பணியிடத்தின் லொக்கேஷன் கூகுளை மேப் ல் பார்க்க லிங்க் வசதி வேண்டும். இது ஒரு மாத காலம் அவகாசம் தந்து இடமாறுதல் விருப்பமுள்ளவர்கள் அறிந்து புரிந்து இடமாறுதல் முடிவுக்கு வர அவகாசம் தர வேண்டும். அதன் பின் இடமாறுதல் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் பதிவு மேற்கொள்ளப்பட்டு மாநில சீனியாரிட்டி படி வரிசைப்படுத்தி வரிசை எண் 1 ல் உள்ள பணியாளருக்கு ஆன்லைனில் முதல்வாய்ப்பு வழங்கி அவர் எந்த காலிப் பணியிடத்தை தெரிந்தெடுக்கிறாரோ அதை பதிவு செய்து அந்தப் பணியிடம் காலிப் பணியிட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டுவிட்ட பட்டியலில் அனைத்து விபரங்களுடன் வைக்கப்பட்டு மீதமிருக்கும் காலிப்பணியிடங்கள் பட்டியல் வரிசை எண் 2 ல் உள்ள விண்ணப்பதாரருக்குக் காண்பிக்கப்பட வேண்டும். இது போன்ற வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு காலிப்பணியிடங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். நன்றி


S.Martin Manoj
நவ 09, 2024 16:53

இதுவாவது பரவாயில்லை ஜாடி மாடலில் வேலைவாய்ப்பு என்பதே இல்லை


Bala
நவ 09, 2024 10:30

,இப்பொழுது குற்றம் சாட்டும் சில நர்ஸ்கள் எந்த வழியில் வேலைக்கு சேர்ந்தார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும். எல்லோரும் நேர் வழியிலேயா சேர்ந்திருப்பார்கள். தன் வினை தன்னை சுடும்.


rasaa
நவ 09, 2024 10:29

,திராவிட மாடல்


RAJ
நவ 09, 2024 08:50

என்ன மேடம்,, .. இதுக்கு முன்னாடி எப்பவுமே நடக்காத மாதிரி பேசுறீங்க..


krishna
நவ 09, 2024 08:31

IDHUDHAANDAA DRAVIDA MODEL AATCHI. I DONT CARE IPPADIKKU TASMAC KANJA AATCHI THUNDU SEATTU.


jayvee
நவ 09, 2024 08:16

கடந்த நாற்பது ஆண்டுகளில் பணியில் இருக்கும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் மொத சொத்து விவரத்தையும் ஆராய்ந்து அந்த திருடர்களை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும் .. மொத சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.. ஆனால் அதை செய்ய நேர்மையான நீதிமன்றமும் அதிகாரிகளும் தேவை ..


sankar
நவ 09, 2024 11:20

அப்படியே அரசியல்வாதிகளையம்


சமூக நல விருப்பி
நவ 09, 2024 08:15

திராவிட மாடல் என்றாலே திருட்டு மாடல் அரசு என்று பொருள். அவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. திமுக அரசு நம் மக்களை தமிழ் மக்களாக பார்க்கவில்லை. அடைமைகளாக தான் பார்க்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை