உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருவர் கூட சேராத 30 இன்ஜி., கல்லுாரிகள்

ஒருவர் கூட சேராத 30 இன்ஜி., கல்லுாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இன்ஜினியரிங் சேர்க்கைக்காக நடந்த இரண்டு கட்ட கலந்தாய்வில், 30 கல்லுாரிகளில் ஒரு மாணவர் கூட சேராத தகவல் வெளியாகி உள்ளது.அண்ணா பல்கலையின் கீழ் உள்ள, 433 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அரசு ஓதுக்கீட்டில், 1, 79,938 இடங்கள் உள்ளன. இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கடந்த மாதம் 22ல் துவங்கியது. சிறப்பு விருப்ப மாணவர்களுக்கு நடந்த கலந்தாய்வு முடிவில், தங்களுக்கான படிப்புகளையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்த, 836 மாணவ, மாணவியருக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, கடந்த மாதம் 29ல் துவங்கி, இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்து உள்ளது. இதில், பொதுப்பிரிவில் 62,802 பேருக்கும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில், 8,308 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி, மொத்த இன்ஜினியரிங் இடங்களில் தற்போது வரை, 71,946 இடங்கள் நிரம்பி உள்ளன. இது, மொத்த இடங்களில், 39 சதவீதம். இதுவரை நிறைவடைந்துள்ள கலந்தாய்வுகளின்படி, அண்ணா பல்கலையின் கிண்டி வளாக கல்லுாரி, எம்.ஐ.டி., உள்ளிட்ட நான்கு கல்லுாரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் 14 கல்லுாரிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பி உள்ளன. மேலும், 57 கல்லுாரிகளில், 80 சதவீத இடங்களும், 114 கல்லுாரிகளில், 50 சதவீத இடங்களும், 197 கல்லுாரிகளில், 10 சதவீத இடங்களும் நிரம்பி உள்ளன. அதேநேரம், 30 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

VM.mariappan
செப் 27, 2024 18:02

இன்றைய குறுக்கெழுத்து என் ஆறு இடமிருந்து வளம் இரண்டு டேஸ் ஒரு படியாகும் இதில் லிட்டர் ரெண்டு என்றால் ஒன்றரை படியாகும் ஒரு படி என்பது ஒன்றரை கிலோ ஜெய் ஸ்ரீ ராம்


VM.mariappan
செப் 27, 2024 18:02

இன்றைய குறுக்கெழுத்து என் ஆறு இடமிருந்து வளம் இரண்டு டேஸ் ஒரு படியாகும் இதில் லிட்டர் ரெண்டு என்றால் ஒன்றரை படியாகும் ஒரு படி என்பது ஒன்றரை கிலோ ஜெய் ஸ்ரீ ராம்


Ramesh Sargam
ஆக 24, 2024 21:11

பல கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதற்காக திறக்கப்படுகின்றன. பாடம் சொல்லித்தந்து மாணவர்களை திறமையான என்ஜினீயர்களாக மாற்ற அல்ல. பல மருத்துவ கல்லூரிகள் நிலையும் இதேதான்.


Mohan
ஆக 24, 2024 18:59

அந்த 30 கல்லூரிகளில் வவுச்சரில் சம்பளம் வாங்கும் பேராசிரிமர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் ,இன்னும் வேறு எந்த எந்த கல்லூரிகளில் ""வேலை"" பார்க்கின்றனரோ ??? சூப்பர்


sundarsvpr
ஆக 24, 2024 09:40

முதலில் மாணவர்கள் சேராத கல்லூரிகள் இவைகளுடைய அங்கீகாரம் ரத்து செய்யப்படல்வேண்டும். இந்த கட்டடங்களை மார்க்கெட் விலையில் அரசு கையப்படுத்தவேண்டும். ஆறு திங்களுக்குள் உபயோக படுத்தவேண்டும். இல்லையெனில் இடித்திடவேண்டும். காலியாய் இருந்தால் எவ்வாறு மர்ம மாளிகையாக கொடிகட்டி பறக்கும் என்பது காவல்துறைக்கும் அரசியல்வாதிகள் அறிவார்கள். இடத்தை சுற்றி நடமாட்டம் இருக்காது.


M S RAGHUNATHAN
ஆக 24, 2024 09:34

ஒரு மாணவர் கூட சேராத, 10 சதவிகிதத்திற்கும் குறைவாக சேர்க்கை இருக்கும் கல்லூரிகள்.பெயர் என்ன ? அந்த கல்லூரிகள் correspondents யார்? அந்த கல்லூரிகளில் 2024 வரை தேர்ச்சி விகிதம் என்ன ? முதல் பருவம் முதல் கடைசி பருவம்.வரை எத்தனை மாணவர்கள் arrears இல்லாமல்.தேர்ச்சி பெற்றனர் ? இந்த விவரங்களை.அண்ணா பல்கலை கழகம் நிர்வாக குழு உறுப்பினர் ஆக இருக்கும் Syndicate member உதய நிதி உடனே வெளி இட்டு மாணவர்கள் வருங்காலத்தை காப்பாற்ற வேண்டும்.


veeramani
ஆக 24, 2024 09:23

அண்ணா பல்கழை கலகத்தின் இணைப்பு முப்பது கல்லூரிகளுக்கும் தற்காலிமாக நிறுத்தப்பட்டு இன்னும் மூன்று ஆண்டுகளில் முழுவதும் ரத்து செய்யலாம்


MANI VANNAN MANI
ஆக 24, 2024 09:17

அந்த கல்லுரிகளின் பெயர்களை வெளியிட வேண்டும்,அது ஒரு சாரரின் சமுதாய கல்லுரியாக இருந்தால் அவர்கள் சமுதாயம் அந்த கல்லுரிகளை உயர்த்தி விடுமே


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 08:40

படிக்கவே சந்தோஷமா இருக்கு , கல்வித்தந்தைகள் என்ற பெயரில் கொட்டம் அடிக்கும் இனி அடுத்த பிசினெஸ் என்று ஓடிவிடும்


VENKATASUBRAMANIAN
ஆக 24, 2024 08:24

இவ்வளவு என்ஜினியரிங் காலேஜ் தேவையா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை