மேலும் செய்திகள்
காற்றாலைகளை புதுப்பிக்க கொள்கை வெளியிட்டது அரசு
05-Sep-2024
சென்னை:'மின் உற்பத்தி கழகம் மற்றும் பசுமை எரிசக்தி கழகத்துக்கு, 79 பேரை இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்கொண்டு வந்த மின் உற்பத்தி, பகிர்மான பணியை பிரித்து, கடந்த ஜனவரியில் மின் உற்பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம் என, இரண்டு நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. வழக்கு
அரசு ஏற்படுத்திய புதிய திட்டத்தின்படி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள், ஊழியர்கள் 79 பேரை, மின் உற்பத்தி கழகத்துக்கும், பசுமை எரிசக்தி கழகத்துக்கும் இடமாற்றம் செய்ய ஜூனில் உத்தரவிடப்பட்டது.இதை எதிர்த்து, மின்வாரிய கணக்காளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தள்ளுபடி
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி என்.செந்தில்குமார் பிறப்பித்த உத்தரவு:மின்சார சட்டத்தின்படி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தில் நிறுவனங்களை ஏற்படுத்திக் கொள்ள, அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முத்தரப்பு ஒப்பந்தத்தை மனுதாரர் சங்கமே தாக்கல் செய்திருக்கும் போது, அந்த ஒப்பந்தமே மேற்கொள்ளப்படவில்லை என்பது தவறானது. 50,000 ஊழியர்கள் இருக்கும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், 79 பேர் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால், புதிதாக துவங்கப்பட்ட நிறுவனங் கள் செயல்பட முடியாமல் உள்ளன. கடந்த பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தம், அனைவரையும் கட்டுப்படுத்தும். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
05-Sep-2024