உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணி எதுவெனினும் இனி கையில்... ஆடை உற்பத்தியாளருக்கு வாய்த்த வரம்

துணி எதுவெனினும் இனி கையில்... ஆடை உற்பத்தியாளருக்கு வாய்த்த வரம்

பேஷன் டிசைனர்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கு தேவையான துணி - தேவையான அளவு ஒரே இடத்தில் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. சில நேரங்களில் சிறிய அளவும் தேவைப்படுகிறது. இதற்கு ஆபத்பாந்தவனாக 'பி2பி'(ஒரு வணிக நிறுவனத்துக்கும் மற்றொரு வணிக நிறுவனத்துக்கும் இடையிலான வணிகம்) 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் உள்ளன. இதில் ஒன்று தான் 'பேப்ரிட்டோ'. இது, பேஷன் பிராண்ட்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கான 'பி2பி' துணி சந்தை தளமாகும்.நாடு முழுவதும் உள்ள நுாற்றுக்கணக்கான மில்கள், வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து வினியோகத்தை ஒருங்கிணைத்து, அதிநவீன செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி துணிகளை வழங்குகிறது; தடையற்ற தேடுதல், எளிய சாம்ப்ளிங், தரம் உறுதியான வினியோகம் ஆகியவற்றுடன் ஆயிரக்கணக்கான துணி விருப்பங்களை நிறைவேற்றுகிறது.

உரிய நேரத்தில் வினியோகம்

நிகழ்நேர ஆர்டர் 'டிராக்கிங்'குடன் சரியான நேரத்தில் வினியோகிக்க, பரந்த அளவில் மில்களுடன் இந்நிறுவனம் உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது.பின்னல், பருத்தி, கலப்பு, பாலியஸ்டர், ரேயான், ஓவன், டெனிம் துணிகள் கிடைக்கின்றன. இந்நிறுவன தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள துணியின் அளவு விற்பனையாளர்களின் சரக்கு மேலாண்மை கருவிகள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. இதன் மூலம் காட்டப்படும் அளவு விற்பனையாளருடன் நேரடி கையிருப்பாகும். ஆர்டருக்கேற்ப துணி போதாமை என்ற அபாயத்திற்கு வாய்ப்பே இல்லை.

சாம்பிள் துணி அனுப்பப்படும்

துணியில் உள்ள மெட்டீரியல்கள், கட்டமைப்பு, எடை, அகலம், குறைந்த அளவிலான ஆர்டர் உள்ளிட்டவை குறித்த விரிவான விவரக்குறிப்புகள் இந்நிறுவனத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. துணியின் படங்களும் காட்டப்படுகின்றன.சாம்பிள் துணியை பார்க்க விரும்பினால் அனுப்பி தருவர். கூடுதல் துணிகள் வைத்திருந்தால், இந்நிறுவனம் மூலம் விற்கவும் முடியும். தொடர்புக்கு: www.fabrito.in. அலைபேசி: +91 74284 22455, இ மெயில்: fabrito.in.விபரங்களுக்கு இ மெயில்: Sethuraman.gmail.com9820451259 இணையதளம் www.startupandbusinessnews.com - சேதுராமன் சாத்தப்பன் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை