உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலாவதி வாகனங்களை காலத்தில் ஏலம் விடுங்க!

காலாவதி வாகனங்களை காலத்தில் ஏலம் விடுங்க!

கோவை: கோவை மாவட்ட நிர்வாக அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் காலாவதியான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு துறைகளில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு கார், ஜீப் போன்ற வாகனங்கள் அலுவலக பயன்பாட்டுக்காக வழங்கப்படுகின்றன. போக்குவரத்து விதிமுறைகளின் படி, 15 ஆண்டுகளுக்கு மேல் வாகனங்களை பயன்படுத்த இயலாது. இவ்வாகனங்கள், காலாவதி செய்ய அனுமதி பெற்று ஏலம் விடப்படுகிறது.அரசு அலுவலகங்களில் காலாவதியான வாகனங்கள், ஆண்டுக்கணக்கில் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகின்றன. அவை உடனுக்குடன் ஏலம் விடப்பட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆண்டுக்கணக்கில் தாமதிப்பதால், அதன் மதிப்பு முற்றிலும் போய் விடுகிறது.வழக்கமாக, அரசு போக்குவரத்து பணிமனையில் வாகனம் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை சென்னை போக்குவரத்து பணிமனைக்கு அனுப்பப்படும். அங்கு அனுமதி கிடைத்தவுடன், ஏலம் விடுவதற்கான பணிகள் துவக்கப்படும். காலாவதியான வாகனங்கள் உடனுக்குடன் ஏலம் விடப்பட்டால், ஒரு வாகனத்திற்கு, 50,000 முதல் 1 லட்சம் வரை அரசு துறைக்கு வருமானம் கிடைக்கும். ஆண்டுக்கணக்கில் தாமதம் செய்து பின்னர் விடுவதால், 5000 -- 6000 ரூபாய் என, ஒரு வாகனத்திற்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை மட்டுமின்றி அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள காலாவதியான வாகனங்களை ஏலம் விட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !