உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன்: 3 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன்: 3 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

மதுரை: மதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட 14 வயது பள்ளி மாணவன் 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டான். மதுரை மாவட்டம் எஸ்எஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் மைதிலி ராஜலட்சுமி. இவரது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். மாணவன் தந்தை ராஜசேகர் என்பவர் ஆறு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். வழக்கம் போல், இன்று(ஜூலை 11) மாணவன் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற நிலையில், திடீரென ஆட்டோவை, காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டினர். ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியோடு சேர்த்து, மாணவனையும் கடத்தினர்.இதையடுத்து சிறுவனின் தாய் மைதிலி ராஜலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு, ரூ.2 கோடி தந்தால் தான் மகனை விடுவிப்போம் என மிரட்டல் விடுத்தனர். சிறுவனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் கடத்திச் சென்ற கும்பலை போலீசார் வலை வீசி தேடினர்.இதனையறிந்த கொள்ளையர்கள் உடனடியாக பள்ளி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை மதுரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிறுவனை மீட்ட போலீசார், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2024 10:55

காவல் துறை அதிகாரிகள் திறமை வாய்ந்தவர்கள். ஆனால் உங்களிடம் பணபலம் அல்லது அதிகார பலம் அல்லது ஆள் பலம் இருந்தால் மட்டுமே நீங்கள் காவல்துறையிடமும் நீதி மன்றத்திலும் நியாயம் பெற முடியும். நமது ஜனநாயக அமைப்பில் மனிதாபிமானம் சுத்தமாகவே நசுக்கப்பட்டுவிட்டது.


lalbahadur (69)
ஜூலை 11, 2024 21:02

கடத்தல் விஷயத்தில் உடனடியாக செயல்பட்டு அவர்களை மீட்ட காவல்துறைக்கு என் மனமார்ந்த பாராட்டு க்கள்


வாய்மையே வெல்லும்
ஜூலை 11, 2024 20:38

மாடல் அரசுக்கு வாழ்த்துக்கள் பல. ரவுடி அராஜகத்திற்கு எதிராக இரும்புக்கரம் துருபிடிப்பதற்கு மும்பே நடவடிக்கை எடுத்தால் வெகுஜனம் வாழ முடியும் இந்த பாழும் கிணற்றில் உள்ள ஆட்சியில். கவலையுடன் ... அப்பாவி மனிதன்


sai venkatesh
ஜூலை 11, 2024 19:32

Vidyal vidayala vidyavum vidiyadu


sridhar
ஜூலை 11, 2024 18:55

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் , கடத்தியவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவார் பாருங்கள் …


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ