காலை உணவு திட்டம் விரிவாக்கம்
வரும் நிதியாண்டில், 10,000 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு, 37,000 கோடி ரூபாய் அளவில், வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது உயர்கல்வி படிக்கும் மூன்றாம் பாலினத்தவருக்கு, 'புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் கீழ், மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' நடப்பாண்டு நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 3.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் சென்னை, கோவை, மதுரை நகரங்களில், தலா 1,000 மாணவியர் தங்கும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய, மூன்று மாணவியர் விடுதிகள், 275 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.