உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரைபட புத்தகம் வெளியீட்டில் கவனம்: கல்வி நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை

வரைபட புத்தகம் வெளியீட்டில் கவனம்: கல்வி நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மாணவர்களின் கல்விக்காக, வரைபடம் வெளியிடும் போது, இந்திய சர்வே துறையின் விதிகளை பின்பற்றாவிட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசின் பல்கலை மானிய குழு எச்சரித்துள்ளது.பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, இந்திய வரலாறு, புவியியல் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்க, இந்திய மற்றும் உலக வரைபடங்கள் பாடப்புத்தகத்தில் இணைக்கப்படும். இதற்காக, 'அட்லஸ்' என்ற வரைபட புத்தகங்களை, கல்வி நிறுவனங்களும், தனியார் பதிப்பக நிறுவனங்களும் தயாரித்து வெளியிடும்.இந்நிலையில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் இடையிலான எல்லை பிரச்னைகள் அதிகரிப்பதால், சமீபத்தில் முரண்பாடான வரைபடங்கள் வெளியாகின்றன. எனவே, அண்டை நாடுகளால் வெளியிடப்படும் வரைபடங்கள், இந்திய மாணவர்களிடம் ஊடுருவாமல் தடுக்க, கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இந்திய மற்றும் உலக வரைபடங்களின் புத்தகங்களை, கல்வி நிறுவனங்கள் வெளியிடும் போது, 'சர்வே ஆப் இந்தியா' என்ற இந்திய சர்வே துறையின் விதிகளை பின்பற்ற வேண்டும். சர்வே ஆப் இந்தியாவின் வரைபட விதிகளை உறுதி செய்து, வரைபட புத்தகம் தயாரிக்க வேண்டும். விதிகளை மீறி வரைபடம் வெளியிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ