உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் இன்று முதல் 30ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் சாத்தியார் பகுதியில் 3 செ.மீ., மழையும், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 2 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி